எங்களின் இலக்கு
உன்னதமான சேவையும் இணக்கமான மக்கள் வாழ்க்கையும்.
எங்களின் நோக்கம்
அரச கொள்கைகளுக்கு இணங்க பயனுள்ள அணுகுமுறையூடாக வள முகாமைத்துவ மற்றும் நல்லாட்சி ஊடாக மக்களின் வாழ்க்கை முறையை கட்டயெழுப்புதல்.
ஹதரலியத்த பிரதேச செயளக பிரிவு
கண்டி மாவட்டத்தில் கலகெதர தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள ஹதரலியத்த பிரதேச செயளக பிரிவு, வடக்கே தும்பனை பிரதேச செயளக பிரிவையும் கிழக்கே ஹாரிஸ்பத்துவ பிரதேச செயளக பிரிவையும் தெற்கே யடிநுவர பிரதேச செயளக பிரிவையும் மேற்கே ரம்புக்கனை பிரதேச செயளக பிரிவையும் எல்லைகளாக கொண்டது.
மனித மற்றும் பௌதிக அபிவிருத்தியை அடைவதற்காக தும்பனை பிரதேச அதிகார எல்லையிலிருந்து பிரித்து ஹதரலியத்த பிரதேச செயளக பிரிவு 2000.04.10 திகதி ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் வாடகை அடிப்படையில் நடத்திச் சென்ற போதிலும் அவ்விடம் சொந்தமாக்கப்பட்டு 2005.11.13 ம் திகதி இரண்டு மாடி கட்டடமும் நிர்மானிக்கப்பட்டது.
புவி சார்வியல்
அழகிய வீட்டுத்தோட்டங்கள், சிறிய நீர் வீழ்ச்சிகளினால் நிறைந்த அலகல்ல, கொழுகல,கெரண்டியகல எனும் 3 மலைகளால் சூழப்பட்ட ஹதரலியத்த பிரதேச செயளக பிரிவு சுமார் 62 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 1500-2500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இப் பிரதேசம் மிதமான காலநிலையைக் கொண்டது. 26-27˚F சாதாரண வெப்பநிலையையும் 1750 மி.மீ வருட மழை வீழ்ச்சியையும் பெறுகிறது. ரம்புக்கன் ஓயா பிரதேசத்தை செழுமையுரச் செய்யும் முயற்சியை பிரதேச விவசாயிகளிடம் கேட்டறியலாம்.
செஞ்சரளை மண், களிமண், சிவப்பு,மஞ்சள் லெடசொலிக் மண் என்பன பிரதேசத்தின் பிரதான மண் வகைகளாகும். சிங்காஹேன பிரதேசத்திலுள்ள வெண் திருவனா கல் பூமி இயற்கையின் அருட்கொடையாகும்.
வரலாற்று முக்கியத்துவம்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அஸரண ஸரண ஸரணங்கர சங்கராஜ தேரரின் ஜன்ம புண்ணிய பூமியான சங்கராஜபுர கிராமம் ஹதரலியத்த பிரதேச செயளக பிரிவிலேயே அமைந்துள்ளது. போதியின் வாசணை வீசும் பண்டைய விகாரைகள் 33 உள்ளன. கண்டிய யுகத்திற்கான ஓவிய கலைஞர்கள், கவிஞர்களில் எம்மவர்களும் காணப்பட்டனர்.
நிருவாக முறையில் இப் பிரதேசத்தில் 57 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளன. அரசின் நிருவாக கட்டமைப்பை கிராமத்திற்கு கொண்டு செல்லும் அரச அதிகாரிகளின் சேவை மகத்தானது.
பிரதேச செயலாளர்கள்
| பெயர் | இருந்து | வரை |
| திரு.விஜேரத்ன சகலசூரிய | 2000.04.10 | 2000.06.19 |
| திரு.தயா எல். சிரிவர்தன | 2000.06.20 | 2003.05.06 |
| திரு.பீ.ஜீ.எச்.எம். சுகததாச | 2003.05.23 | 2005.07.13 |
| திரு.ஈ.எம்.எச்.பீ.ஏகனாயக்க | 2005.07.13 | 2007.08.16 |
| திரு.எஸ்.சேனானாயக்க | 2007.08.17 | 2011.12.31 |
| திரு.கே.பி. சிறிபத்தன | 2012.02.03 | 2017.02.22 |
| திரு.டப்ளியூ.ஜீ.எம்.ஹேமன்த குமார | 2017.04.07 | இன்று வரை |













